கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்து 1996  ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த திரைப்படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. 

2 . 0  பட வேலைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால், அடுத்ததாக இந்தியன் 2  படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த உள்ளார் ஷங்கர். ஏற்கனவே திரைக்கதை, வசனம் எழுதும் பணிகளை இவர் முடித்து விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் முடிவு செய்து விட்டார். நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. முதல் பாகத்தில் சி.பி.ஐ அதிகாரியாக வந்த நெடுமுடி வேணு இதிலும் அதே கதாப்பாத்திரத்தில் வருகிறார். கதாநாயகியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த படம் குறித்து ஷங்கர் கூறியுள்ளதாவது , "இந்தியன் மாதிரி படங்களை நான் ஏற்கனவே எடுத்து விட்டேன். இந்தியன் - 2 படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்று யோசிப்பதற்காக அதிக நாட்கள் எடுத்துக்கொண்டேன். முழு கதையையும் தயார் செய்து  கமலஹாசனிடம் சொன்னேன். எழுதும்போது எப்படி ரசித்தேனோ அப்படியே அவரும் ரசித்து கேட்டார். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடர்ங்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.