India will proud for dangal
அமிர்கானின் ‘தங்கல்’ திரைப்படத்தை சீனாவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் ‘பெருமைக்குரிய திரைப்படம்' என புகழ்ந்துள்ளார்.
இந்தியாவில் சக்கை போடு போட்ட அமிர்கானின் ‘தங்கல்’ திரைப்படம், யாரும் எதிர்பார்க்காத வகையில் சீனாவில் 1000 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் சீனாவின் முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிருபர்கள் கலந்து கொண்ட “பிரிக்ஸ் ஊடக மன்ற நிகழ்வு” சீனாவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமையேற்று பேசிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரான லின் யுன்ஷான், தங்கல் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
“இந்தியாவும் அந்நாட்டின் ஊடகங்களும் தங்கல் போன்ற ஒரு படத்திற்காக பெருமை அடைய வேண்டும்.
இந்த திரைப்படம் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
சீன ஊடகங்கள் இந்த திரைப்படம் குறித்து பெரிய அளவில் செய்திகளை வெளியிட வேண்டும்.” எனவும், கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் வெளிவந்த வெற்றிகரமான, ஊக்கப்படுத்தக்கூடிய திரைப்படம் தங்கல் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கல் படத்தின் வெற்றியால், சீனாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக அமிர்கான் மாறியுள்ளார்.
