income tax office give the samman for vishal
நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷாலின் அலுவலகத்தில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. ரெய்டுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்.
இது எப்போதும் நடக்கக் கூடிய சாதாரண சோதனை தான் என்றும், இதன் பின்னணியில் எந்த அரசியல் கட்சியும் இல்லை எனக் கருதுவதாகவும் கூறினார். அப்படியே எதாவது இருந்தாலும் தனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை; காரணம் தான் முறையாக வரி கட்டி வருவதாக தெரிவித்தார்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 51 லட்சத்திற்கு வரி செலுத்த வேண்டிய விவகாரம் தொடர்பாக, விஷாலை வரும் 27 ஆம் தேதி ஆஜராகும் படி அவருக்கு வருமான வரித் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
