Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்கர் விருதுக்கு வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் பரிசீலிக்கப்பட்ட 4 தமிழ் படங்கள் உட்பட மொத்தம் 22 படங்கள்!

அகாடமி விருதுகளுக்கான, வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் தேர்வு செய்ய பரிசீலிக்கப்பட்டு 22 படங்கள் பற்றிய முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
 

including 4 Tamil films and 22 Indian language movies considered for the Oscars
Author
First Published Sep 27, 2023, 10:38 PM IST

2023-ம் ஆண்டுக்கான அகாடமி (ஆஸ்கார்) விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் கிரிஷ் காசரவல்லி தலைமையிலான குழு 2023-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

பட்டியிலிடப்பட்டிருந்த பல்வேறு படங்களில் இருந்து இந்த குழு '2018 - ‍‍எவரிஒன் ஈஸ் எ ஹீரோ (2018 - Everyone is a Hero) மலையாள‌ திரைப்படத்தை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

including 4 Tamil films and 22 Indian language movies considered for the Oscars

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் காசரவல்லி, கேரளாவில் நடைபெற்ற இயற்கை பேரிடரை மையப்படுத்தி மனிதமே முக்கியம் எனும் கருத்தை '2018 - ‍‍எவரிஒன் ஈஸ் எ ஹீரோ' மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும், ஒட்டு மொத்த உலகத்திற்கும் இக்கருத்து பொருந்தும் என்றும் தெரிவித்தார். 

பாக்கிய லட்சுமி சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ! வைரலாகும் புகைப்படம்!

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் ரவி கொட்டரக்கரா கூறியதாவது: "பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை உலகெங்கிலும் நாம் காண்கிறோம். தன்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று பூமித்தாய் மன்றாடுகிறாள். 2015ம் ஆண்டு சென்னை வெள்ளம், 2018ம் ஆண்டு கேரள வெள்ளம், 2023ம் ஆண்டு இமாச்சல், உத்தரகண்ட் பேரழிவு மற்றும் லிபியாவில் ஏற்பட்ட பேரழிவு போன்ற இயற்கை சீற்றங்களில் ஆயிரக்கணக்கான உயிர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி பணம் பறிபோனது. இவற்றில் இருந்து பாடம் கற்று, உலகைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். '2018 - எவரிஒன் ஈஸ் எ ஹீரோ' இதைப் பற்றியும் இன்னும் பல விஷயங்களையும் திறம்பட பேசும் ஒரு சிறந்த படமாகும்." என தெரிவித்தார்.

including 4 Tamil films and 22 Indian language movies considered for the Oscars

ஆஸ்கார் விருது 2023 க்கான தேர்வுக் குழுவில், மொத்தம் 16 பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் தமிழில் 4 படங்கள் உட்பட மொத்தம் 22 படங்களை பார்த்து பரிசீலித்த பின்னரே, இறுதியில் 2018 படத்தை தேர்வு செய்தனர்.

எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள்! அப்பாவான சந்தோஷத்தில் புகழ் வெளியிட்ட புகைப்படம்.. குவியும் வாழ்த்து!

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைப்பதற்காக பரிசீலக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் - 2023

1 பாலகம் - தெலுங்கு
2 தி கேரளா ஸ்டோரி - ஹிந்தி
3 12th பெயில் - ஹிந்தி
4 ஸ்விகடோ - ஹிந்தி
5 ராக்கி ஆர் ராணி கிய் பிரேம் கஹானி - ஹிந்தி
6 தி ஸ்டோரிடெல்லேர் - ஹிந்தி
7 மியூசிக் ஸ்கூல் - ஹிந்தி
8 Mrs. சட்டர்ஜீ vs நோர்வே - ஹிந்தி
9 விடுதலை பார்ட் 1 - தமிழ்
10 குஹும்மர் - ஹிந்தி
11 தசரா - தெலுங்கு
12 காதர் 2 - ஹிந்தி
13 வால்வி - மராத்தி
14 மாமன்னன் - தமிழ்
15 பாப்லயோக் - மராத்தி
16 தி வாக்சின் வார் - ஹிந்தி
17 சார் - தெலுங்கு
18 வாத்தி - தமிழ்
19 அபி டொஹ் சப் பகவான் பரோஸ் - ஹிந்தி
20 விருபாக்ஷா - தெலுங்கு
21 2018 ‍ எவரிஒன் ஈஸ் எ ஹீரோ - மலையாளம்
22 ஆகஸ்ட் 16, 1947 - தமிழ்

இந்த வரிசையில், தமிழில், விடுதலை பாகம் 1, வாத்தி, மாமன்னன், ஆகஸ்ட் 16,1947 ஆகிய படங்கள் பரிசீலிக்க பட்டது.

including 4 Tamil films and 22 Indian language movies considered for the Oscars

தெலுங்கில், பாலகம், தசரா, சார், விருபாக்ஷா ஆகி படங்கள் பரிசீலிக்க பட்டன.

ஹிந்தியில், தி கேரளா ஸ்டோரி, 12 th பெயில், ஸ்விகடோ, ராக்கி ஆர் ராணி கிய் பிரேம் கஹானி, தி ஸ்டோரி டெல்லர், மியூசிக் ஸ்கூல், Mrs . சட்டர்ஜி vs நார்வே, குஹூம்மர், காதர் 2, தி வாக்சின் வார், அபி டொஹ் சப், பகவான் பரோஸ் ஆகிய 11 படங்கள் பரிலீசிக்கப்பட்டது.

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில்.. அனைவர் மத்தியிலும் பிரபல நடிகரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த நடிகை ஸ்வாதி

மலையாளத்தில், அனைவராலும் ஒருமனதாக ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்ட 2018 எவரிஒன் ஈஸ் எ ஹீரோ என்கிற படம் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டது.

அதேபோல் மராத்தியில், வால்வி மற்றும்  பாப்லயோக் என்கிற படங்கள் ஆஸ்கர் தேர்வுக்கு பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios