புஷ்பா திரைப்படம் (Pushpa Movie) நேற்று வெளியான நிலையில், திரையரங்கில் ஆடியோ சரியாக கேட்காததால், ரசிகர்கள் சிலர் அங்கிருந்த சேர்களை உடுத்தும், ஆபரேட்டர் ரூம்மை சேதப்படுத்தியும் ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
புஷ்பா திரைப்படம் நேற்று வெளியான நிலையில், திரையரங்கில் ஆடியோ சரியாக கேட்காததால், ரசிகர்கள் சிலர் அங்கிருந்த சேர்களை உடுத்தும், ஆபரேட்டர் ரூம்மை சேதப்படுத்தியும் ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் உருவான 'புஷ்பா : தி ரைஸ்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியானதில் இருந்து ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும், மற்றொரு தரப்பினர் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் இந்த பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள புஷ்பா தி ரைஸ் திரைப்படம் , இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகவே இருந்த நிலையில், எதிர்பார்ப்புக்கு ஏற்ற போல் முதல் நாளிலேயே சுமார் 40 கோடி வசூல் சாதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான அல்லு அர்ஜுன் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமையையும் புஷ்பா பெற்றுள்ளது.

இந்த படத்தை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஆரவாரத்தோடு வரவேற்ற நிலையில், படத்தின் ஆடியோ கேட்காததால் திரையரங்கையே ரசிகர்கள் தும்சம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் அமைந்துள்ள பழனி திரையரங்கில் தமிழில் டப் செய்யப்பட்ட புஷ்பா படம் வெளியாகியுள்ளது. ஆரம்ப காட்சிகளில் இருந்தே ஆடியோ சரியாக கேட்காததால், அதிருப்தியடைந்த ரசிகர்கள் அங்கிருந்த சேர்களை உடையாததோடு, ஆபரேட்டர் ரூம்மையும் தாக்கினர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த போலீசார்... ரசிகர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவ குறித்த வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
