இந்த படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின

பாகுபலி முதல் மற்றும் இரண்டாவது பாகத்தை தொடர்ந்து சாஹோ என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடித்த பிரபாஸ் இப்போது ஓவர் ஆல் இந்தியாவின் ஸ்டாராக மாறிவிட்டார். அதனால் அவருடைய படத்தின் மீதான எதிர்பார்ப்பும், பட்ஜெட்டும் அதிகரித்து வருகிறது. தற்போது தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வேற லெவலுக்கு கொண்டாட வைத்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இந்த திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021-ல் தொடங்கி 2022-ல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. பிரபாஸூக்கு வில்லனாக சயிஃப் அலிகான் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதிலும் ராவணனாக நடிக்க உள்ளார். 

இந்த படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஓம் ரவுத் கியாராவிடம் ஆதி புருஷ் கதையை சொல்ல அவருக்கு பிடித்துவிட்டதாம். மேலும் தன் கதாபாத்திரம் வெயிட்டாக இருப்பதால் பிரபாஸ் படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டாராம் கியாரா அத்வானி. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கியாரா அத்வானி கையெழுத்திடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.