இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்று பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதி செய்திருந்தார். இதனால் கோலிவுட்டில் புதிய சலசலப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் சங்கம் செயல்படும் போது புதிய சங்கம் எதற்கு என கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகள் தயாரிப்பாளர்கள் சார்பில் புகார் மனு ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. 

சங்கத்திற்கு எதிராக நடக்கும் பாராதிராஜா உள்ளிட்டோரை சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று புதிய சங்கம் உதயமானது தொடர்பாக பழைய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் தங்களது மனக்குமுறல்களை பதிவு செய்தனர். தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும் போது, 3000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் சங்கத்தில் இருந்து 50 பேர் மட்டும் பிரிந்து செல்வது நன்றாக இல்லை. தாய் சங்கத்தை விட்டு வலியுடன் பிரிவதாக கூறும் பாரதிராஜா, அதை மறக்க மாட்டேன் என கூறுகிறார். அம்மாவின் கையை வெட்டி வீட்டில் வைத்துக்கொண்டு... அம்மா உன்னை மறக்க மாட்டேன் என்று சொன்னால் ஏற்க முடியுமா? என வேதனையுடன் தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: துளி கூட குறையாத அழகுடன்... 25 வருடத்திற்கு பிறகு தமிழில் ‘கம்பேக்’ கொடுக்கும் பிரபல நடிகை...!

40 பேர் சேர்ந்து சங்கத்தை உடைப்பது என்பது ஏற்புடையதல்ல. அண்ணன் பாரதிராஜாவை கைகுப்பி கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு வழிகாட்டுங்கள்... உங்களுடைய சொல்லை மிஞ்சுவதற்கு இங்கு யாரும் இல்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களை எல்லாம் அனாதையாக விட்டு விட்டு, இவங்க எல்லாம் படம் எடுக்காதவங்க. நாங்க எல்லாம் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்றால்... நாங்க மட்டும் என்ன விடுப்பா? என கொஞ்சம் கடுப்பாக கேள்வி எழுப்பினார்.