அடுத்த வாரம் ஆகஸ்ட் 8ம் தேதி அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸாவதால் ஒரே ஒரு வார வசூலை மட்டும் அள்ளிவிட மாட்டோமா என்ற நப்பாசையில் வரும் வெள்ளி ஆகஸ்ட் 2ம் தேதியன்று பதினோரு படங்கள் ரிலீஸாகவுள்ளன. ஒரே நேரத்தில் இத்தனை படங்கள் என்பது தற்கொலைக்குச் சமமானது.

இன்றைய பத்திரிகை விளம்பரங்களின்படி வரும் வாரத்தில் ரிலீஸாகவிருக்கும் படங்களின் விபரம் இதோ...ஆகஸ்ட் 1ல் வெளியாகும் படம் கழுகு 2. ஆகஸ்ட் 2ல் வெளியாகும் படங்கள்...’ஐஆர் 8’,’ஜாக்பாட்’,’கொலையுதிர் காலம்’,’மயூரன்’,’நீரோட்டத்தில் சிக்கிய படகு’,’நுங்கம்பாக்கம்’,’ரீல்’’தொரட்டி’,’வினை அறியார்’ இந்த நீண்ட லிஸ்ட் போதாதென்று இவர்களுடன் ‘
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ என்கிற ஒரு முரட்டு ஆங்கிலப்படமும் ரிலீஸாகிறது.

இத்தனை படங்கள் ரிலீஸானபோதும் உண்மையான போட்டி என்பது ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’டுக்கும் நயன்தாராவின் ‘கொலையிதிர்காலத்துக்கும் தான். அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸாகும் 8ம் தேதிக்குப்பின் பத்துப்பைசா கூட வசூலாகாது என்கிற நிலையில் ஜோதிகா, நயன் படங்கள் கூட ஒரு வாரம் ஓடினால் போதும் என்கிற தயாரிப்பாளர்களின் மன நிலை பரிதாபத்துக்குரியதுதான்.