In 2018 Vijay Sethupathi films are releasing People are sullen
2018-ல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஏழு படங்கள் ரிலீஸாகப்போகுது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் வருடத்திற்கு ஐந்து முதல் ஏழு படங்கள் வரை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் அடிக்கடி படம் வெளியிட்டால், தொடர்ந்து ஒரே முகத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு போர் அடித்து விடும். அதனால், கொஞ்சம் இடைவெளி விட்டு படத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறேன் என்றார்.
கடந்த 2016-ல் ஆறு படங்களும், 2017-ல் ஐந்து படங்களும் வெளியிட்டுள்ளார். ஆனால், 2018-ல் தொடர்ந்து 7 படங்களை வெளியிட இருக்கிறார்.
ஆம். 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்" படம் வெளியாகவுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள "96" என்ற படம் வெளியாகவுள்ளது.
அதேபோன்று, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள "சூப்பர் டீலக்ஸ்" வெளியாகவுள்ளது.
அடுத்து பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள "சீதக்காதி" படம் வெளியாகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் நடித்துள்ள "இடம் பொருள் ஏவல்" வெளியாக உள்ளது.
தெலுங்கில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா, ஜகபதி பாபு ஆகியோருடன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் "சயீரா நரசிம்ம ரெட்டி" படம் வெளியாகவுள்ளது.
மற்றும் சாயிஷா சைகல், நேஹா சர்மா, விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் "ஜூங்கா" படம் வெளியாகவுள்ளது.
