கனடாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளும் நிதி திரட்டலும் கடந்த சில ஆண்டுகளாக நடந்தன.

அப்படி அமையவுள்ள தமிழ் இருக்கைக்கான தமிழ்தாய் வாழ்த்துப்பாடலுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் இமான் இசையமைக்க உள்ளார்

2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராகத் தனது 17ஆவது வயதில் அறிமுகமானார் இமான். பல  முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் படங்களுக்கு இமான் இசையமைத்துள்ளார்.

கிராமப்புறத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மைனா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்கள் இமானுக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்தன.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சுமார் 20 தொலைக்காட்சித் தொடர்களுக்கும் இமான் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியாகி இதுவரை இல்லாத அளவுக்கு விஸ்வாசம் படப் பாடல் பெரு வெற்றி பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள்  கொண்டாடி வருகின்றனர்.

மேலும் விஸ்வாசம் படம் இமானுக்கு 100 ஆவது படம் என்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்தது.  இந்நிலையில்தான் கனடாவில் உள்ள டொடரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக ஒரு பாடலுக்கு  இமான் இசைமைத்திருந்தார்.

இதற்காக கனடாவில் உள்ள தமிழ் காங்கிரஸ் அவருக்கு மாற்றத்திற்கான தலைவர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. விருது பெற்ற புகைப்படத்தைத் தனது ட்விட்டரில் பதிவிட்ட இமான் தமிழ் காங்கிரஸிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.