Imaikkaa Nodigal first look Anurag Kashyap Nayanthara and Atharva unblinking gaze looks intense
டிமான்ட்டி காலனி’ திரைப்பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்’. கடந்த ஒரு வார பில்டப்புகளுக்குப் பிறகு நேற்று மாலை இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் மூன்று பேர் இருப்பதுபோல் வெளியிடப்பட்டிருக்கிறது.
கறுப்பு மற்றும் மெட்டாலிக் கிரே கலர் பேக்-கிரவுண்டில் இவர்கள் மூவரும், மற்றவர்களுடைய முகமூடிகளைக் கையில் வைத்திருப்பதைப் போல இந்த ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இமைக்கா நொடிகள் டீமின் அறிவிப்பின்படி இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ராஷி கண்ணாவின் படமும் இடம்பெற்றிருக்க வேண்டும். நயன்தாராவுடன் நிற்கும்போது ராஷி கண்ணா எந்த விதத்தில் கவனத்தை ஈர்க்கிறார் என்பதைப் பார்க்கவே ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள்.
ஏனென்றால், டோலிவுட்டின் சூப்பர்லேட்டிவ் பியூட்டி என்ற பெயரில் அவரை இந்தப் படத்துக்காக அறிமுகப்படுத்தியிருந்தது படக்குழு.
அப்படியொரு நிலை இருந்தாலும், அனுராக் காஷ்யப்பின் வில்லன் சிரிப்பு மற்றும் நயன்தாரா - அதர்வாவின் தீர்க்கமான பார்வையுடன் என்ன சொல்ல வர்றாங்க என்ற கேள்வியையும், ஏதோ இருக்கு என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கத் தவறவில்லை.
ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் அத்தனை ட்ரெண்டிங்குகளையும் உடைத்து முதலிடத்தைப் பெற்றிருக்கிறது இந்த ஃபர்ஸ்ட் லுக்.
