ill give velaikkaran for who gave me everything SK ...

எனக்கு எல்லாமே கொடுத்த மக்களுக்கு நான் திருப்பி கொடுக்கும் ஒரு கருத்தான படம்தான் "வேலைக்காரன்" என்று எஸ்.கே எனும் சிவகார்த்திகேயன் உருக்கமாக தெரிவித்தார்.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், அனிரூத், மோகன்ராஜா என ஏராளமானோர் கலந்து கொண்டி விழாவை சிறப்பித்தனர்.

இதில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது: ‘‘தனக்கு எல்லாமே கொடுத்த மக்களுக்கு நான் திருப்பி கொடுக்கும் ஒரு கருத்தான படம்தான் இந்த ’வேலைக்காரன்‘. இனிமேல் நான் விளம்பரங்களில் எப்போதுமே நடிக்கப் போவதில்லை" என்று கூறினார்.

விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கான காரணத்தை சிவகார்த்திகேயன் சொல்லவில்லை.

வேலைக்காரன் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் பகத் பாசில், சினேகா உள்ளிட்ட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு ரம்ஜி செய்துள்ளார். இதன் தயாரிப்பாளர் ஆர். டி. ராஜா.