ஒல்லி பெல்லி இடுப்பில் பல ரசிகர்கள் மனதை கவர்ந்து இழுத்தவர் நடிகை இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழில், 'கேடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

ஒல்லி பெல்லி இடுப்பில் பல ரசிகர்கள் மனதை கவர்ந்து இழுத்தவர் நடிகை இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழில், 'கேடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தினார். பின் நடிகர் விஜய் நடித்த 'நண்பன்' திரைப்படத்தின் நடித்தார். இந்த படத்திற்கு பின் இவருக்கு தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் ஒரு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது.

பாலிவுட் திரையுலகத்தில் தற்போது கவனம் செலுத்தி வரும் இவர், தன்னுடைய உடல் எடையை அதிகரித்து காணப்படுகிறார். இது குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் எனக்கு பிடிப்பதால் நான் இப்படி இருக்கிறேன் என பதிலடி கொடுக்கிறார்.

இந்நிலையில் சமீப காலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருவதால், இவரிடம் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கூறி தயாரிப்பாளர் ஒருவர் அணுகியுள்ளார். ஆனால் இவர் 40 லட்சம் சம்பளம் கொடுத்தால் மட்டுமே தன்னால் ஆட முடியும் என கூறி அவரையே ஆட்டம் காண வைத்து விட்டார் என கூறப்படுகிறது.