ilayaraja talks about political issue
இசையமைப்பாளர் இளையராஜா, எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் பேசுவார். ஆனால், கவிஞர் அப்துல் ரகுமானில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், திடீரென அரசியல் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-
விழாவுக்கு வந்தால் முதலில் இளையராஜா தலைமை தாங்குவார் என கூறுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், யாரும் அறிவிக்கவில்லை. அறிவிச்சாங்களா... இல்ல... அப்புறம் எப்படி நான் தலைவரு... தலைவர் இல்லாம நடக்குது.
நாடு அப்படி போய்க்கிட்டு இருக்கு. நாடு அப்படி போறதால நாமும் நாட்டோட போவோம். நம்ம இல்லாம நாடு இல்ல. நாமதான் நாடு. அதனால் நான் யாருக்கும் தலைவன் அல்ல. இறைவனுக்கு மட்டும் தொண்டன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் தற்போது தலைமை இல்லாமல் ஆட்சி நடப்பதாக இளையராஜா விமர்சித்தது, புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல், ஒரு கருத்தை கூறினார். அது அமைச்சரை குறிப்பிட்டதாக கூறி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி இசையமைப்பாளர் இளையராஜாவும் கருத்தை கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
