Ilayaraja press meet.Padma vibushan award

தமிழகத்தையும், தமிழக மக்களையும் கௌரவித்திருக்கிறது பத்ம விபூஷன் விருது என இசையமைப்பாளர் இளையராஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2017-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட உள்ளது. 

பத்ம விபூஷன் விருது பெற்ற இசை பிரம்மா இளையராஜாவை தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், விஷால் உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசி மூலமும், டுவிட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விருது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா , செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

 மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை; தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் என இயைராஜா தெரிவித்துள்ளார்