Asianet News TamilAsianet News Tamil

இசைஞானி இளையராஜாவை வச்சி செஞ்ச சம்பவம்...! கலெக்டர் வரை சென்ற புகார்... குழப்பம், சிக்கல்...!

ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரி குளங்களை மீட்டக வேண்டும் என நீதிமன்றங்களும், அரசும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், நன்றாக உள்ள  குளத்தை மூடுவது சட்ட விரோத செயல் ஆகும்  , குளத்தை தூர்வாரி பராமரிக்கலாமே தவிற, இருக்கும் குளத்தை மண்ணிட்டு மூடிவதை ஏற்க முடியாது, இளையராஜா போன்ற பிரபலங்கள் இதுபோன்ற செயல்களை அனுமதிக்கக்கூடாது, என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ilayaraja music function stay
Author
Trichi, First Published Aug 20, 2019, 8:51 AM IST

குளத்தை ஆக்கிரமித்து இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜாவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது, அதற்கு விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதுilayaraja music function stay

திருச்சியில், வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள இசைஞானி இளையராஜா அவ்ரகளின் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி திருச்சியை சேர்ந்த மைக்கேல் என்ற நபர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார், அந்த மனுவில் உள்ள விவரம் பின்வருமாறு:- 
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் வரும் 25ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியை  நடத்தும் நிறுவனம் அங்குள்ள குளத்தை மண்போட்டு மூடிவிட்டு  நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது, ilayaraja music function stay

ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரி குளங்களை மீட்டக வேண்டும் என நீதிமன்றங்களும், அரசும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், நன்றாக உள்ள  குளத்தை மூடுவது சட்ட விரோத செயல் ஆகும்  , குளத்தை தூர்வாரி பராமரிக்கலாமே தவிற, இருக்கும் குளத்தை மண்ணிட்டு மூடிவதை ஏற்க முடியாது, இளையராஜா போன்ற பிரபலங்கள் இதுபோன்ற செயல்களை அனுமதிக்கக்கூடாது, என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்நிறுவனத்தின் மீது ஆக்கிரமிப்புகள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இளையராஜா நிகழ்ச்சிக்காக மேலும் ஒரு குளத்தை ஆக்கிரமிப்பு செய்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் திருச்சியில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி தள்ளிப்போடுவதா, அல்லது வேறு இடத்தில் நடத்துவதா என்ற யோசனையில் இளையராஜா இருப்பதாக சொல்லப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios