Asianet News TamilAsianet News Tamil

50 லட்சம் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமனறத்தில் மனு..!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் இசைஞானி இளையராஜாவின் ரெக்கார்டிங் பணிகளை  பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம். இளையராஜா தனது பெரும்பாலான படங்களுக்கு அங்குதான் இசையமைத்தாா். 

Ilayaraja files petition in Chennai High Court seeking  50 lakh compensation
Author
Chennai, First Published Dec 12, 2020, 1:11 PM IST

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் இசைஞானி இளையராஜாவின் ரெக்கார்டிங் பணிகளை  பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம். இளையராஜா தனது பெரும்பாலான படங்களுக்கு அங்குதான் இசையமைத்தாா். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

ஆனால் எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்துவிட்டு, புது தியேட்டர் கொண்டு வர முடிவு செய்ததால் கடந்த ஒரு வருடமாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா காலி செய்து தர வேண்டும் என, அதன் நிர்வாகத்தினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து காலி செய்யவைத்தனர். 

Ilayaraja files petition in Chennai High Court seeking  50 lakh compensation

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு எதிராக இயக்குனர் பாரதி ராஜா,  தலைமையில், பிரபலங்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Ilayaraja files petition in Chennai High Court seeking  50 lakh compensation

மேலும் இதுகுறித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தனக்கு மன உளைச்சல் தந்து வெளியேற்றுவதற்காக பிரசாத் ஸ்டூடியோ ரூ.50 லட்சம் இழப்பீடு தர கோரி இசையமைப்பாளர் இளையராஜா  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனக்கு சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் வெளியேற்றியது நியாயமற்றது என்றும் தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் பிரசாத் ஸ்டுடியோ தலையிட தடை விதிக்கவும் இளையராஜா தனது மனுவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios