சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் இசைஞானி இளையராஜாவின் ரெக்கார்டிங் பணிகள்  பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் நிா்வாகம். இளையராஜா தனது பெரும்பாலான படங்களுக்கு அங்குதான் இசையமைத்தாா். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தார். 

ஆனால் எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்துவிட்டு, புது தியேட்டர் கொண்டு வர முடிவு செய்தனர். இதனால் கடந்த சில மாதங்களாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா காலி செய்து தர வேண்டும் என, அதன் நிர்வாகத்தினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இவர்களுக்கு எதிராக இயக்குனர் பாரதி ராஜா தலைமையில், பிரபலங்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

இதையும் படிங்க: நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

இதுகுறித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சென்னை காவல் ஆணையரிடம் இன்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது அறையில் இருந்த பொருட்கள் மற்றும் இசை குறிப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.