Asianet News TamilAsianet News Tamil

Ilayaraaja"என்னை யாரும் இந்த அளவு அவமானப்படுத்தியதில்லை" ; இளையராஜா : கடைசி விவசாயிக்கு வந்த சோதனை

Ilayaraja தனது அனுமதி பெறாமல் கடைசி விவசாயி படத்திலிருந்து தனது இசையை மாற்றியுள்ளதாக இளையராஜா இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

Ilayaraja complaint against kadaisi vivasayi  movie in the association.
Author
Chennai, First Published Dec 1, 2021, 9:30 AM IST

காக்கமுட்டை திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி திரையுலகினரின் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதையும் வென்று அசத்தியது. அதன் பின்னர் குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கினார் மணிகண்டன். இந்த இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றன. 

இந்நிலையில் இயக்குனர் மணிகண்டன், இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் கடைசி விவசாயி. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை இயக்குனர் மணிகண்டனே தயாரித்துள்ளார்.

இப்படத்துக்கு முதலில் இளையராஜா இசையமைத்து வந்தார். பின்னர் படக்குழுவினருக்கும், இளையராஜா தரப்புக்கும் நெருடல் உருவானதால், படத்தில் இருந்து இளையராஜா இசையை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணன் இசையை கோர்த்து படத்தை தயார் செய்து விட்டனர்.

Ilayaraja complaint against kadaisi vivasayi  movie in the association.

படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் தனது இசையை மாற்றியதை அறிந்த இளையராஜா; தன்னுடைய அனுமதி இன்றி இசையையமிப்பாளரை மாற்றியதாக இசையமைப்பாளர் சங்கத்தில் படக்குழுவினர் மீது புகார் அளித்துள்ளாராம். 

Follow Us:
Download App:
  • android
  • ios