பிரபல பாடலாசிரியரும் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் நியமிக்கப்பட்டவர் புலமைபித்தன் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவரது இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இசைஞானி இளையராஜா இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியுள்ளதாவது... "கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக உயிர்விட்டார், என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

1935ஆம் ஆண்டு பிறந்த ராமசாமி என்ற தன் இயற்பெயரை, தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக புலமைபித்தன் என்று மாற்றிக் கொண்டதாகவும் அறிந்தேன், என்னுடைய இசையில் பல நூறு நல்ல திரைப்பாடல்களை எழுதியுள்ளார். அவருடைய பாடல்களில் வரிகளின் அழகுக்காக மட்டுமின்றி உயர்ந்த இலக்கியத் அழகுக்காகவும், மக்களால் பாராட்டப்பட்டது. கலைஞரின் மறைவு நமது தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். வயது மூப்பின் காரணமாக மறைந்த கவிஞர் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் தமிழ் திரையுலகை சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், என்று தன்னுடைய அறிக்கையில் இளையராஜா தெரிவித்துள்ளார்.