இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில், கிருஸ்துமஸ் வெளியீடாக வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று மாரி 2 . இந்த படத்தின் முதல் பாகம் வெற்றி பெறாவிட்டாலும் இரண்டாவது பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

இந்த படத்தில் தனுஷ்  மற்றும் சாய் பல்லவியின் நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. மேலும் தனுஷ் எழுதிய 'ரவுடி பேபி' பாடல் 18 நாட்களில் 10  லட்சம் பேரால் சமூக வலைத்தளத்தில் பார்த்து ரசிக்கப்பட்டது. மேலும் 'மெர்சல்' படத்தின் சாதனையையும் முறியடித்தது.

இந்நிலையில், இந்த படத்திற்காக இளையராஜா பாடி இருந்த, பாடல் படத்தில் இடம் பெறாத நிலையில், தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவருடைய மனதையும் கவர்ந்து வருகிறது.

வீடியோ இதோ: