ilaiyaraja about against christian issue
எப்போதும் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என இருக்கும் இசைஞானி இளையராஜா அண்மை காலமாக ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பி தன்னுடைய பாடல்களை பாடக்கூடாது என கூறியது திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாகியது.
கிறிஸ்தவ மதம் பற்றி பேசிய இளையராஜா:
இந்நிலையில் இவர் கிறிஸ்த்தவர்களின் கடவுளாக ஏசுவை பற்றியும், அவர்களுடைய இறை நம்பிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும் கூறி இளையராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.
இளையராஜா கூறிய கருத்து:
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய இசைஞானி இளையராஜா , “உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகரிஷியை போல வேறு எவரும் கிடையாது என்று கூறி கிறித்தவர்களின் கடவுளான இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். ஆனால் அவர் உயிரித்தெழுந்து வந்தார் என இதுவரை நிரூபணமாகவில்லை என கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்ததாகவும், பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான் உயிரித்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில்” என்று கூறியுள்ளார்.
இளையராஜா கூறியது கிறிஸ்த்தவர்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதத்தில் உள்ளது என கூறி அவரது வீட்டின் முன் கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
