Ilaiyaraaja in Dubai : இசைஞானியும்... இசைப்புயலும்! ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவுக்கு திடீர் விசிட் அடித்த இளையராஜா
Ilaiyaraaja in Dubai : ஏ.ஆர்.ரகுமானின் ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு திடீர் விசிட் அடித்த இளையராஜாவுக்கு தனது ஸ்டூடியோ முழுவதையும் சுற்றிக்காட்டிய ஏ.ஆர்.ரகுமான், அவருடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்து மகிழ்ந்தார்.
தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இளையராஜா. தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா, இன்றளவும் ஓய்வின்றி உழைத்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார்.
இந்நிலையில், துபாயில் தற்போது ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ளும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இசைக் கச்சேரியும் நடத்தப்படுகிறது. கடந்த மாதம் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டன.
கடந்த மார்ச் 5-ந் தேதி இளையராஜாவின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. இதைக் காண அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத கூட்டத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இந்த இசைக் கச்சேரியில் இளையராஜாவும் கலந்துகொண்டு பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
கச்சேரி முடிந்ததும் துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு திடீர் விசிட் அடித்தார் இளையராஜா. அவருக்கு தனது ஸ்டூடியோ முழுவதையும் சுற்றிக்காட்டிய ஏ.ஆர்.ரகுமான், அவருடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்து மகிழ்ந்தார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான். இந்த சந்தோஷமான தருணம் குறித்து விளக்கி உள்ளார்.
அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது: “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... கிழிந்த பேண்ட்.. கையில் ரத்தக் காயங்கள்! அச்சச்சோ.. அஜித்துக்கு என்னாச்சு- போட்டோ பார்த்து பதறிப்போன ரசிகர்கள்