Valimai shooting :கிழிந்த பேண்ட்.. கையில் ரத்தக் காயங்கள்! அச்சச்சோ.. அஜித்துக்கு என்னாச்சு- ஷாக் ஆன ரசிகர்கள்
Valimai shooting : வலிமை படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது சண்டைக் காட்சிகள் தான். இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் பணியாற்றி இருந்தார்.
தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அஜித். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மீடியா வெளிச்சத்தை விரும்பாதவர் அஜித். பட விழாக்கள், புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கூட கலந்துகொள்ள மாட்டார். இருந்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு தான் போகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசான படம் வலிமை. எச்.வினோத் இயக்கி இருந்த இப்படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி, ராஜு ஐயப்பா, கார்த்திகேயா, புகழ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.
அஜித்தின் கெரியரில் முதன்முறையாக இது பான் இந்தியா படமாக வெளியிடப்பட்டது. ஆதலால் 10 நாட்களில் இப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. வலிமை படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது சண்டைக் காட்சிகள் தான். இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் பணியாற்றி இருந்தார்.
நடிகர் அஜித் இப்படத்துக்காக ரிஸ்க் எடுத்து பல்வேறு ஸ்டண்ட் காட்சிகளில் நடித்திருந்தார். பைக் சேஸிங் காட்சியில் நடித்தபோது நடிகர் அஜித் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வீடியோவையும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படக்குழு வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்து ரசிகர்கள் பதறிப்போயினர்.
இந்நிலையில், தற்போது அந்த விபத்துக்கு பின் நடிகர் அஜித் மருத்துவமனையில் ரத்தக் காயங்களுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. அஜித் கையில் ஏராளமான் சிராய்ப்புகளும், ரத்தக் காயங்களும் இருக்கின்றன. அதுமட்டுமின்றி அவர் கீழே விழுந்ததில் அவருடைய கவச உடை கிழிந்து கிடப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீர்கள் தல என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ரஜினி காம்போவில் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி.! அல்லு தெறிக்கவிடும் தலைவர் 169 அப்டேட்..