igg boss What is the reason behind aarti and gayathri asks questions to Merina girl Juiely
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அதில் ஒரே ஒரு நாள் கலந்து கொண்டு பலரையையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஜூலி.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது கூட பலருக்கும் தெரியாது. “சின்னம்மா சின்னம்மா ஓ பி எஸ் எங்கம்மா” என்று அவர் எழுப்பிய முழக்கம்தான் பலரையும் அதிர வைத்தது. அதன் பின்னர் அவர் எங்கிருக்கிறார்? என்று கூட யாருக்கும் தெரியாது. ஊர், பேர் தெரியாத அந்த பெண்ணை, அனைவரும் தமிழச்சி என்றும், ஜல்லிக்கட்டு போராளி என்றுமே அழைக்க ஆரம்பித்தனர்.
வலைத்தளங்களில் அவரை பாராட்டி எண்ணற்ற பதிவுகளும், மீம்ஸ்களும் குவிய ஆரம்பித்தன. சில ஊர்களில் அந்த பெண்ணுக்கு பேனர்கள் கூட வைக்கப்பட்டன. அந்த அளவுக்கு, தமிழ் மக்களிடையே தங்கள் வீட்டு பெண்ணாக அறியப்பட்ட, ஜூலியானா என்ற அந்த பெண், விஜய் டி.வி யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார்.
.jpg)
பல மொழி டிவி சேனல்களில் வெற்றி பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சி, இப்போது தமிழுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. விஜய் டி.வி யில் நடிகர் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள ஒரு பெரிய வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு வசிக்க வேண்டும் என்பது விதிமுறை. போட்டியாளர்களை மொத்தம் 30 சிசிடிவி காமிராக்கள் கண்காணிக்கும்.
தினமும் இரவு 9 மணி முதல் 10 மணிவரை விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. அன்றைய தினம் நடந்தவற்றில் முக்கியமானவற்றை தொகுத்து அந்த நேரத்தில் காண்பிக்கபடும். அதில், போட்டியாளர்களில் ஒருவராக உள்ள ஜூலி, நடிகர் ஸ்ரீ-யிடம் பேசிய உரையாடல் சமூகவலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சியின் முதல் நாளே காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கிலிருந்து பதிவு சென்றுள்ளது. அதேபோல் கணேஷிம் அவரது மனைவியை மிஸ் பன்னுவதாக டுவீட்டியுள்ளார். இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனையடுத்து, நடிகர் ஸ்ரீ சற்று புலம்பிக்கொண்டே இருந்தார். இந்நிலையில்தான், அந்த வீட்டிற்குள் என்ன நடந்தது என்ற வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது.
அதில், ஒநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ சோகமாக இருக்க, அவர் அருகில் ஜல்லிட்டிற்கு ஆதரவான போராட்டத்தில் முழக்கமிட்டு பிரபலமான ஜூலி அமர்ந்திருந்தார்.

.jpg)
அப்போது ஜூலியோ தான் திட்டியது மூன்று தலைவர்களைதான் என்றார். அதற்கு ஆர்த்தி தனிப்பட்ட முறையில் ஒருவரது பெயரை குறிப்பிட்டு பாயின்ட் அவுட் செய்தீர்கள் என்றார. அதற்கு அந்த பெண்ணோ பாயின்ட் அவுட் செய்வதில் என்ன தவறு என்று கேட்கிறார். இப்படியே போன பேச்சில், ஜல்லிக்கட்டுக்கான போராளி என்றால் ஜல்லிக்கட்டுக்காக மட்டும்தான் போராட வேண்டும் என்று காயத்ரி கண்டிப்புடன் கூறினார். உடனே ஆர்த்தி ஏன் விவசாயிகளுக்காக போராட வில்லையே என்றார். அதற்கு ஜூலி, எனக்கு ஆசைதான் ஆனால்... என்று பதில் சொல்வதற்குள் முந்தி கொள்ளும் ஆர்த்தி விவசாயிகள் போராட்டத்தின்போது ஏன் டைம் இல்லையா? என்று நக்கலாக கேட்கிறார்.
ஜூலியிடம், அப்போ நீங்க போராளினு கூறவே கூடாது என்றார் காயத்ரி. அதற்கு அவரு்ம நான் அப்படி கூறிகொள்வதே இல்லையே என்றார். அத்துடன் ப்ரோமோ காட்சிகள் முடிந்தன.
.jpg)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேச என்ன காரணம்?
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வறுத்தெடுக்கப்பட்டவர்கள் மோடி, சசிகலா, ஓபிஎஸ் இந்த ஜூலியும் இந்த மூன்று பேரையும் குறிப்பிட்டு கோஷம் எழுப்பினார். பாஜகவைச் சேர்ந்தவர் காயத்ரி ரகுராம், அதிமுகவைச் சேர்ந்தவர் ஆர்த்தி இவர்கள் இருவரும் இவர்களது கட்சியை போலவே கடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக வாய்திறக்காமல் இருந்தனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து ஜூலியை வறுத்தெடுக்கிறார்கள்.
