If you kill me I will celebrate it - Lakshmi Ramakrishnan tweet...
நடிகை இலட்சுமி இராமகிருஷ்ணன் டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கு தோன்றியதை மிகவும் தைரியமாக பேசக்கூடியவர் நடிகை இலட்சுமி இராமகிருஷ்ணன். இயக்குநராகவும், நடிகையாகவும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர்.
இவருக்கு என்ன பிரச்சனைகள் வந்தாலும் மனம் தளராது போராடக் கூடியவர். சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இவையெல்லாம் சேர்ந்து இலட்சுமி இராமகிருஷ்ணனுக்கு தனி அடையாளம் கொடுத்தது.
ஆனால், இவர் பட்டித்தொட்டி வரை தெரிய காரனமாக அமைந்தது என்னமோ ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிதான்.
இந்த நிகழ்ச்சியை கிண்டலடித்து ‘அருவி’ என்ற படம் வெளியாகி சமீபத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் பார்த்து கோபமடைந்த இலட்சுமி இராமகிருஷ்ணன் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தார். உடனே அதற்கும் ரசிகர்கள் அவரை எதிர்மறை கருத்துகளை கலாய்த்து விட்டனர்.
இந்த நிலையில் இலட்சுமி இராமகிருஷ்ணன் தன்னுடைய டிவிட்டரில் வித்தியாசமான ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் படத்தில் நெற்றியில் காசு, கழுத்தில் மாலையோடு பிணத்தை போல வேடம் அணிந்திருக்கிறார்.
அந்தப் பதிவில், ‘நீங்கள் என்னை கொன்றாலும் நான் அதை கொண்டாடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
