If sasikala heard the TR she would be in cool room not in jail
நான் சொன்னபடி கேட்டிருந்தால் சசிகலா இருந்திருப்பார் குளுகுளு அறையிலே! இருந்திருக்க மாட்டார் சிறையிலே! என்று டி.ஆர் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் இயக்குநர் டி.ராஜேந்தர்.
அப்போது அவர், “காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலின்போது ஜெயலலிதாவால் மதிக்கப்பட்டு அழைக்கப்பட்டு பிரசாரத்துக்கு சென்றவன் நான்.
ஜெயலலிதாவுடனும், சசிகலாவுடனும் பல காலகட்டத்தில் நட்போடு, பல விஷயத்தில் உறுதுணையாக, பக்கபலமாக, கலந்தாலோசனை செய்யும் இடத்தில் இருந்த நான், நீங்கள் கட்சியின் பொதுச் செயலாளரானதோடு இருந்து விடுங்கள். அதற்குமேல் நீங்கள் முதலமைச்சர் ஆகாதீர்கள் என்றேன்.
அதிமுக-வின் பொதுச்செயலாளராக சசிகலா ஆனபோது அதை நான் எதிர்க்கவில்லை. அது அவர்கள் கட்சி பிரச்சனை. ஆனால், அவர் முதல் அமைச்சராக முயற்சி செய்தபோது நான் வேண்டாம் என்ரு எச்சரித்தேன். இது ஒரு சூழ்ச்சி. உங்களுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி, நீங்கள் அடைந்து விடுவீர்கள் வீழ்ச்சி என்று நான் கூறினேன்.
நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே… இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே… நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால் இப்போது அவருக்கு இந்த நிலை வந்திருக்காது” என்று அவர் கூறினார்.
