தென்னிந்திய சினிமாவில், திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது என்பதை முறியடித்து, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் வரும் 13 ஆம் தேதி மட்டும் 3 படங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. அதில் ஒன்று, இவர் நடிப்பில் உருவாகியுள்ள யூ டர்ன் திரைப்படம். இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும், தமிழில் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது. 

ஆனால் இந்த திரைப்படத்தில், கதாநாயகியாக நடிக்காமல், பத்திரிக்கையாளராக நடித்துள்ளார் சமந்தா.  இவருக்கு ஜோடியாக 'மாஸ்கோவின் காவிரி' படத்தில் இவருடன் இணைந்து நடித்த நடிகர் ராகுல் ரவீந்தர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் நரேன், பூமிகா, ஆதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இந்த படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் 'யு டர்ன்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவிடம், நீங்கள் ஒரு பத்திரிக்கையாளராக இருந்தால் நடிகர் விஜயிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என கேட்டதற்கு... அவர் எப்படி நடன அசைவுகளை கண்களால் ஒரு முறை பார்த்து விட்டு, எந்த ரிகசல்லும் இல்லாமல் ஆடுகிறார் என்பதை தான் முதலில் கேட்பேன் என கூறி விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி செய்வாரா.. அதே போல் செய்து காண்பித்தார்.