If i have a million dollars I will buy RK Nagar constituency and the chief minister post - Divya

என்னிடம் ஒரு மில்லியன் டாலர் பணம் இருந்தால் ஆர்.கே.நகர் தொகுதியையும், முதல்வர் பதவியையும் வாங்கியிருப்பேன் என்று தொகுப்பாளினி திவ்யா கூறி கெத்து காட்டுகிறார்..

கேப்டன் டிவியில் ‘சமையல் மந்திரம்' என்ற நிகழ்ச்சி மூலம் அனைவரின் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை திவ்யா. ‘வம்சம், ‘மரகதவீணை’ போன்ற மெகா சீரியல்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்துள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து அளித்த பேட்டியில் திவ்யா, "சினிமாவில் இருக்கும் பெண்களுக்கும் நிறைய பிரச்சனைகள் வருகின்றன. சமீபகாலமாக நடிகைகள் பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைகள் அனுபவித்ததாக கூறிவருகின்றனர். நானும் அந்த மாதிரி ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு இருக்கிறேன். நான் தைரியமாக எதிர்கொண்டு அவற்றை கடந்து வந்துவிட்டேன்.

என்னிடம் ஒரு மில்லியன் டாலர் பணம் இருந்தால், இந்த ஆர்.கே.நகர் தொகுதியை வாங்கி முதல்வர் பதவி வாங்குவேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது வேண்டுமென்றால், ஆர்.கே.நகர் தொகுதியையும், முதல்வர் பதவியையும் வாங்குவது பெரிதாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது வர்றவங்க, போறவங்க வாங்குறாங்க. எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு. நான் வாங்கக் கூடாதா? என்று சிரித்துக்கொண்டே கேட்டார்..