தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படைப்புகளையும், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையும் இயக்கி வரும் மிஷ்கின், ட்விட்டர் ஸ்பேசில் விஜய் குறித்து ரசிகர்கள் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வேறு லெவல் பதில் அளித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படைப்புகளையும், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையும் இயக்கி வரும் மிஷ்கின், ட்விட்டர் ஸ்பேசில் விஜய் குறித்து ரசிகர்கள் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வேறு லெவல் பதில் அளித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மேலும் செய்திகள்: தளபதியின் முந்தய படத்தின் சாதனையை முறியடித்த 'பீஸ்ட்'... எதில் தெரியுமா?

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இவரது முதல் படமே விமர்சனம் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான 'அஞ்சாதே' திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் தூள் கிளப்பியது. பல முன்னணி இயக்குனரால் மற்றும், நடிகர்களை இந்த படம் திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக தன்னுடைய ஸ்கிரீன் பிலே மூலம் ரசிகர்களை ஈர்த்தார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இவர் இயக்கிய சில படங்கள் சோடை போனாலும், பிசாசு, துப்பறிவாளன், மற்றும் சைக்கோ ஆகிய படங்கள் திரையரங்கில் நின்று பேசியது. தற்போது வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத படங்களாகவும் இப்படங்கள் உள்ளது. 'சைக்கோ' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் 'பிசாசு' படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கின். இயக்கத்தை தாண்டி ஒரு நடிகராகவும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்: பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகளுக்கு திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா..?

இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது . இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் உரையாற்றினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கினால் அவருக்கு எப்படி பட்ட கேரக்டர் தருவீர்கள் என கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின் சற்றும் தயக்கம் இன்றி 'ஜேம்ஸ் பாண்டு' என்று பதில் அளித்துள்ளார். இவரது இந்த பதில் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.