தளபதி நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான 'மாஸ்டர்' படத்தின் சாதனையை, தற்போது அவர் நடித்து வரும் 'பீஸ்ட்' படம் முறியடித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், விஜய் ரசிகர்களை மேலும் உட்சாகமடைய செய்துள்ளது. 

தளபதி நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான 'மாஸ்டர்' படத்தின் சாதனையை, தற்போது அவர் நடித்து வரும் 'பீஸ்ட்' படம் முறியடித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், விஜய் ரசிகர்களை மேலும் உட்சாகமடைய செய்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூர்யா - ஜோதிகா..!

தளபதி விஜயின் பிறந்தநாள் நேற்று மிகவும் பிரமாண்டமாக ரசிகர்களால் கொண்டாட பட்ட நிலையில், தளபதி ரசிகர்களுக்கு முந்தைய நாளே செம்ம விருந்து வைப்பது போல் வெளியானது, 'பீஸ்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும், செகண்ட் லுக். இந்த போஸ்டர்கள் வெளியான 24 மணிநேரத்திற்குள் படைத்துள்ள சாதனை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில் ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 21 மணி நேரத்தில் 2.73 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் பெற்று இந்தியாவிலேயே மிக வேகமாக அதிக லைக்ஸ்கள் பெற்ற சாதனையை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விஜய்யின் நடிப்பில் வெளியான அவரது முந்தைய படமான ‘மாஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிக லைக்குகளை பெற்ற ஃபர்ஸ்ட் லுக் என்கிற சாதனையை படைத்த நிலையில், தளபதியின் சாதனையை அவரது அடுத்த படமே முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: துளியும் மேக்அப் இல்லாமல்... குட்டை டவுசருடன் செம்ம கொஞ்சல்ஸில் ராஷ்மிகா..! யாருடன் தெரியுமா?

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்களும் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. இந்த படத்தில் முதல் நுரையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ் கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும், அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் அனைவரும் அறிந்தது தான்.