சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக ஹீரோவுடன் டூயட் பாட விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

இதையும் படிங்க: காவி நிறத்திற்கு மாறிய “மாஸ்டர்” டீம்... ஐ.டி.ரெய்டால் விஜய் அடித்த அந்தர் பல்டி...!

மிகப்பெரிய திரைக்குடும்ப பின்னணியைக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் அதை பெரிதாக  காட்டிக்கொண்டதில்லை. கதைக்கு முக்கியமான கேரக்டர் என்றால் எந்த வேடத்திலும் நடிக்க தயாராக இருந்தார். அப்படித்தான் அம்மா, தங்கை போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்தார். ஆனால் அப்படி நடித்தது தான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு புது பிரச்சனையாக உருமாறியுள்ளது. 

இதையும் படிங்க: "எனக்கு அசல் தான் வேணும்"... இளம் முன்னணி நடிகரை வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பேட்டி ஒன்றில், இனி அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன். அப்படி நடிப்பதால் பிரபல நடிகர்கள் என்னுடன் ஜோடி போட தயங்குகின்றனர். எனக்கு வயது அதிகம் என ரசிகர்கள் கூட நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் இனி அந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.