நான் திரையுலகப் பணிகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால் பல படங்கள் நடித்து பல கோடிகளுக்கு மேல் சம்பாதித்து இருப்பேன் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய பணிகளுக்கு இடையே ‘துப்பறிவாளன்’ என்ற படத்தில் ஒருவழியாக நடித்து முடித்துள்ளார் நடிகர் விஷால். அந்தப் படம் வருகிற 14-ஆம் தேதி வெளியிட தயாராக இருக்கிறது.

துப்பறிவாளன் குறித்து நடிகர் விஷால், “இந்தப் படம் என்னுடைய திரையுலகப் பயணத்தில் ஒரு மறக்க முடியாத படம்.

இது ஷெர்லாக் ஹோல்ம்ஸ், ஜெய்சங்கர் பாணியில் ஒரு துப்பறியும் படம். இந்தப் படத்தில் ஒரு பாடல் கூட இடம் பெறவில்லை.

மேலும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய பணிகள் காரணமாக இந்தப் படத்தின் பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது.

மேலும், நான் திரையுலகப் பணிகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால் பல படங்களில் நடித்து பல கோடிக்கு மேல் சம்பாதித்திருப்பேன்.

கோடிகளை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். எனக்கு தமிழ் திரையுலகம்தான் முக்கியம்” என்று விஷால் கூறினார்.