I wont spend ten rupees for Bahubali

பாகுபலி மாதிரி ஒரு படத்தை நாங்களே பார்த்ததே இல்லை. செம்மையா இருக்கு. இந்திய படத்திற்கு பாகுபலி ஒரு பொக்கிஷம் என்று சில அறிவு ஜீவிகள் பாகுபலியை தலையில் தூக்கி வைத்துள்ளனர்.

ரூ.1500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த படம் என்று அதன் வெற்றியை புகழ்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படி எல்லோரும் புகழும் இந்த படத்தை மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் என்ன சொன்னாரு தெரியுமா?

“1991-ஆம் ஆண்டு வெளியான பாதாள பைரவி போன்று தான் இருக்கிறது பாகுபலி-2.

பாகுபலி-2 படத்தால் இந்திய சினிமா துறைக்கு எந்த பயனும் இல்லை.

இதுபோன்ற படங்களை பார்க்க நான் 10 ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன்’ என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

அடூர் கோபாலகிருஷ்ணன் கலை, எதார்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் வாயில் இருந்து இப்படி வந்தது ஆச்சரியமில்லை. உண்மையில் பாகுபலி படத்தின் தன்மையை சரியாக சொன்னவர் அடூர் மட்டுமே.

கிராபிக்ஸ் இல்லாத காலத்தில் மிக பிரம்மாண்டமாக எடுத்த தமிழ்ப்படமான சந்திரலேகா படத்துக்கு ஈடாக இதுவரை ஒருபடம் கூட வரவில்லை என்பது சினிமா வட்டாரத்தை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.