பிக்பாஸ் (Biggboss Seasson 5) நிகழ்ச்சியின் இன்றைய புரோமோவில், சின்ன பொண்ணு (Chinna ponnu) கமல் (Kamalhassan) முன் கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்துள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோவில், சின்ன பொண்ணு கமல் முன் கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்துள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரங்களை எட்டியுள்ளது. இதுவரை ஒரு எலிமினேஷன் கூட பிக்பாஸ் வீட்டில் நடைபெற வில்லை என்றாலும், இன்றைய தினம் மலேசியாவை சேர்ந்த மாடலும், சோசியல் மீடியா பிரபலமுமான நாடியா சாங் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: பளீச் பேரழகு... பாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் ஸ்டைலிஷ்.! கீர்த்தி சுரேஷ் பர்த்டே ஸ்பெஷல் ரேர் போட்டோஸ்..!

இந்நிலையில் கடந்த வாரம் விஜயதசமி கொண்டாட்டத்தின் போது, சிறப்பாக பர்ஃபாம் செய்த இரண்டு நபர்களையும், கூட்டத்தில் காணாமல் போனவர்கள் இருவரையும் பிக்பாஸ் மற்ற போட்டியாளர்ளை தேர்வு செய்ய கூறினார். இன்றைய தினம் போட்டியாளர்கள் முன் தோன்றிய கமல் இதுகுறித்து அபிஷேக்கிடம் கேட்டபோது, அனைவர் முன் ஜொலித்த பிரபலம் இமான் அண்ணாச்சி என்றும், காணாமல் போனது சின்ன பொண்ணு மற்றும் நாடியா ஆகியோரை கூறுகிறார்.

மேலும் செய்திகள்: 'மெட்டி ஒலி' சீரியல் நடிகை உமா மகேஸ்வரி திடீர் மரணம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

இதுகுறித்து கமல் முன் பேசிய நாடியா, நான் தொலைந்து போனதாக அவர் என்னை குறிப்பிடுகிறார் என்றால், அவர் என்னை கவனித்துள்ளார். எனவே நான் தொலைத்து போகவில்லை என விளக்கம் கூறுகிறார். சின்ன பொண்ணு அபிஷேக்கின் வார்த்தையால் மனம் நொந்து அழுகிறார். அவரை அக்ஷரா தேற்றுகிறார். பின்னர் கமல் முன் பேசும் சின்ன பொண்ணு நான் மக்கள் மத்தியிலும், இங்கிருக்கும் போட்டியாளர்கள் மத்தியிலும் கண்டிப்பாக தொலைத்து போக மாட்டேன் என கதறி அழுவது இன்றைய புரோமோவில் வெளியாகியுளளது.

Scroll to load tweet…