I will act as an older woman Shriya stupid

2001 ம் ஆண்டு திரையுலகில் கால்பதித்த ஸ்ரேயா உனக்கு 20 எனக்கு 18 திரைப்படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஸ்ரேயா 2007 ம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி போட்டார்.

4 படங்கள்

தற்போது ஸ்ரேயாவின் மார்க்கெட் சரியாக இல்லை.ஆனாலும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார்.
இந்த ஆண்டு அவருக்கு நன்றாக அமைந்துள்ளது. தற்போது அவர் 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கிழவியானாலும் நடிப்பேன்

இந்நிலையில் சினிமா பற்றி அவர் பேசும் போது, தொடர்ந்து சினிமா படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் படங்களில் நடிப்பீர்கள் என்று கேட்கிறார்கள். ஹாலிவுட்டில் நடிகை மெரில் 60 வயதை தாண்டியும் நடிக்கிறார். அவரை போன்று நானும் நடிப்பேன்

கதக் டான்சர்

தமிழில் காயத்ரி, தெலுங்கில் வீர போக வசந்த ராயலு,காயத்ரி, ஹிந்தியில் தட்கா போன்ற படங்களில் நடித்து வருகிறேன். நான் ஒரு கதக் நடன கலைஞர் ஆவேன்

மீண்டும் நடன பயிற்சி

சினிமா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் நடன பயிற்சி மேற்கொள்ளாமல் முடியாமல் போனது. தற்போது மீண்டும் நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

ஆர்வத்தை ஏற்படுத்துவேன்

இளம் தலைமுறையினர் நம் பாரம்பரிய நடனங்களான பரதம், குச்சுப்புடி, கதக் உள்ளிட்டவற்றை கற்க வேண்டும். அவர்களுக்கு அந்த ஆர்வத்தை ஏற்படுத்த கண்டிப்பாக முயற்சி செய்வேன் என்றார்.