ப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி, இவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தார். இதனிடையே சீமானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டார். சீமானுக்கு விஜயலட்சுமி கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

இதனிடையே,  சீமான் தனது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டு எனது சாவுக்கு காரணம் சீமான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார்.  இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார்.

 

இதையும் படிங்க: அழகில் அம்மாவையே ஓரங்கட்டும் ‘ரோஜா’ மதுபாலாவின் அழகிய மகள்கள்.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்...!

இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி தற்கொலை முயற்சிக்கு முன்னதாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சீமானுக்கு எதிராக நீதி கேட்டு பலரிடம் போராடியதாகவும், ஆனால் யாரும் தனக்கு உதவ முன்வரவில்லை என்றும் உருக்கமாக தெரிவித்திருந்தார். மேலும் தன்னை விபாச்சாரி போன்ற வார்த்தைகளால் சீமான் கட்சியைச் சேர்ந்தவர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும், சீமானின் தொடர் டார்ச்சர்கள் தாங்காமல் தற்கொலைக்கு செய்து கொள்ள போவதாகவும், இதுவே தனது கடைசி வீடியோ என்றும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமியிடம் எழும்பூர் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தன்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டதாக விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி, மூச்சுவிட சிரமமாக இருந்த போதும் தன்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டதாகவும், அதற்கான காரணம் தனக்கு புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சீமானின் அக்கிரமங்களுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என குற்றச்சாட்டியுள்ள அவர், எனக்கு பின்னால்  எந்த அரசியல் கட்சிகளும் இல்லை என்றும், நான் நாடகமாடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு தனக்கு ஆதரவாக இருந்த காயத்ரி ரகுராம் கூட தற்போது தன்னுடன் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.