காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள்.. நடிகர் விஜய் அட்வைஸ்..!
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
படிப்பை தவிர்த்து பார்த்தால் குணம், சிந்தனை திறன் மட்டுமே மாணவர்களுக்கு எஞ்சியிருக்கும் என நடிகர் விஜய் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். சென்னை நீலாங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதையும் படிங்க;- 600க்கு 600 மதிப்பெண் பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக கொடுத்த நடிகர் விஜய் - குவியும் பாராட்டுக்கள்
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் மேடைக்கு வந்து மாணவ, மாணவிகளை பார்த்து கையசைத்தார். இதன்பின் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த விஜய், மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் அருகில் அமர்ந்து கொண்டார். அப்போது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் விஜய்க்கு நினைவு பரிசை வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய்:- இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழாக்களில் நிறைய பேசியிருக்கிறேன். ஆனால் இது போன்ற நிகழ்ச்சியில் பேசுவது இதுதான் முதன்முறை. என் மனசுல ஏதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி உணர்கிறேன். யாருக்கும் Advice பண்ண விரும்பவில்லை. உங்களைப் பார்க்கும் போது என் மாணவப்பருவம் நினைவுக்கு வருகிறது. குணத்தை இழக்கிறீர்கள் என்றால் அனைத்தையும் இழக்கிறீர்கள் என்று அர்த்தம். என்னோட கனவு அனைத்தும் சினிமா, நடிப்பு அதை நோக்கியே செல்கிறது. காடு வச்சிருந்தா எடுத்துக்குவானுங்க, காசு வச்சிருந்தா புடுங்கிக்குவானுங்க, ஆனா படிப்ப மட்டும் யாரும் எடுத்துக்க் முடியாது என்று வசனம் வரும். சமீபத்தில் ஒரு படத்தின் வசனம் என்னை மிகவும் பாதித்தது என அரசுன் பட வசனத்தை குறிப்பிட்டு விஜய் பேசினார். அப்படி ஒரு முக்கியத்தும் வாய்ந்த கல்விக்கு என் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்கான நேரம் இது.
இதையும் படிங்க;- 'விஜய் கல்வி விருது விழா' எளிமையாக வந்து மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கலகலப்பூட்டிய தளபதி!
அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தான் வரக்கூடிய நாட்களில் முதல் தலைமுறை வாக்காளர்களாக மாறவிருக்கறீர்கள். காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள். நம் கையை வைத்து நம் கண்ணையே குத்தும் செயல்தான் தற்போது நடக்கிறது. காசு வாங்கிவிட்டு ஓட்டு போடுவது என்பது மிகவும் தவறானது. வாக்குக்காக பணம் வாங்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு சொல்லுங்கள் என நடிகர் விஜய் கூறினார்.