நடிகர் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான "துப்பறிவாளன்" படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டத்தை விஷால் தனது விஎஃப்எஃப்  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முன்னெடுத்தார். வசூல் ரீதியாக நல்ல லாபம் பார்த்ததால், இந்த படத்தையும் சுவாரசியமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தயாரிப்பு செலவு பிரச்சனையால் மிஷ்கின் வெளியேறியதாக தகவல் வெளியாகின. 

"துப்பாறிவாளன் 2" படத்தை தயாரிக்க விஷால் - மிஷ்கின் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை விட அதிகம் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.சொல்லப்பட்ட பட்ஜெட்டை தாண்டி அசால்டாக சுமார் 40 கோடி ருபாய் அதிகம் மிஷ்கின் கணக்கு போட்டு, அதை அந்த படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் விஷால் பார்த்து செம்ம காண்டு ஆகிவிட்டார். இது தான் பிரச்சனைக்கு முழு காரணம் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து மிஷ்கினிடம் கேட்தற்கு, 40 கோடி இல்ல, 400 கோடி கேட்டேன். 100 கோடியில் பாதி படத்தை முடித்துவிட்டேன். மீதி படத்தை முடிக்க 100 கோடி கேட்டேன். கிளைமாக்ஸில் விஷால் சாட்டிலைட்டில் இருந்து குதிக்கிற மாதிரி ஒரு சீன் பிளான் பண்ணி இருந்தேன் அதுக்கு மட்டும் 100 கோடி கேட்டேன். ஆக மொத்தம் 400 கோடி கேட்டேன் என நக்கலாக பதிலளித்துள்ளார். ஏற்கனவே பட்ஜெட்டில் துண்டு விழுந்ததை எண்ணி நொந்து போய் இருந்த விஷால், இதைக்கேள்விப்பட்டு மிஷ்கின் மீது செம்ம கடுப்பில் உள்ளாராம்.