i threw the eggs on my favourite actor for fun
நடிகர் மகேந்திரன் சிறுவயதிலேயே தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவர் பல முக்கிய தமிழ் திரைப்படங்களில் பெரிய பெரிய கதாநாயகர்களின், குழந்தை பருவ கதாபாத்திரத்தை, திறமையுடன் நடித்து அசத்தி இருக்கிறார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தமிழக விருதை, இவர் பல முறை வென்றிருக்கிறார். இப்போது இவர் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
மகேந்திரனிடம் ஒரு பேட்டியின் போது உங்களுக்கு எந்த நடிகருடன் மீண்டும் நடிக்க ஆசை? என கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு விஜய் உடன் மீண்டும் நடிக்க ஆசை, என தெரிவித்திருக்கிறார். இவர் நடிகர் விஜய் உடன் ”மின்சாரக்கனவு” திரைப்படத்தில் விஜய்-ன் சகோதரனாக நடித்திருக்கிறார்.
அப்போது அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில், கிச்சனில் வைத்து சண்டை நடைபெறும். அதில் முட்டையை வீசி ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் காட்சி வரும். அப்போது குழந்தை நட்சத்திரமாக அந்த திரைப்படத்தில் நடித்திருந்த மகேந்திரன், விஜய் மீது விளையாட்டாக வேண்டும் என்றே முட்டைகளை வீசியிருக்கிறார். ஷூட்டிங் முடிந்த பிறகு விஜய் மஹேந்திரனிடம், வேணும்னு தானே முட்டையை வீசின? என சிரித்தபடி கேட்டிருக்கிறார். அந்த நாட்களை தன்னால் மறக்கவே முடியாது என கூறியிருக்கிறார் மகேந்திரன்.
