i take Vijay Sethupathi to Bollywood - Madhavan

கமலுக்கு அடுத்தபடியாக நான் வியந்தது என்றால் அது விஜய் சேதுபதி தான் அவரை பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்வேன் என்று நடிகர் மாதவன் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் வேதா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர் மாதவன், உடன் நடித்த விஜய் சேதுபதி பற்றி பேசியது:

“நான், உலக நாயகன் கமல்ஹாசனுடன் அன்பே சிவம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். அதேபோல பாலிவுட்டில் அமீர்கான், சித்தார்த் ஆகியோருடனும் சேர்ந்து நடித்துள்ளேன். ஆனால் இதுவரை நான் சேர்ந்து நடித்த நடிகர்களில் கமலுக்கு அடுத்ததாக விஜய் சேதுபதி தான் தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்” என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், “விஜய் சேதுபதியை பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்வேன்” என்றும் மாதவன் கூறியுள்ளார்.