i realised the friendship of this director during this ceremony says famous poet

பிரபல நடிகர் விஜயின் அப்பா சந்திரசேகர், தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமாசாமியின் வாழ்க்கை வரலாறு, தற்போது திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் விஜயின் அப்பா தான் டிராஃபிக் ராமாசாமியாக நடித்திருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற அத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர். சந்திரசேகருக்கு என் மீதும், என் எழுத்துக்கள் மீதும், முன்பே நல்ல ஈடுபாடு உண்டு. என நான் அறிந்திருக்கிறேன். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். நாங்கள் சில அரிய தருணங்களில் மட்டுமே சந்தித்து இருக்கிறோம். ஆனாலும் எங்கள் இருவருக்கும் இடையேயான அந்த நட்பு வலுவானதாக இருக்கிறது.

இந்த நட்பினையும், பாசத்தினையும், விஜய்-ன் திருமணத்தின் போது தான் நான் அறிந்து கொண்டேன். அந்த நிகழ்வின் போது நிறைய பிரபலங்கள் அங்கு வந்திருந்தனர். சந்திரசேகர் நினைத்திருந்தால் யாரை வேண்டுமானாலும் முன்னே அழைத்து சென்றிருக்காலாம். ஆனால் அவர் மேடையின் அருகே அழைத்து சென்ற இரு நபர்களில் நானும் ஒருவன். அப்போது தான் தெரிந்தது அவர் எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருக்கிறார் என்று. என தெரிவித்தார்.

மேலும் அவர் இந்த திரைப்படம் முக்கியமான ஒரு சமுதாயக் கருத்தை கூறவருகிறது. நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் சந்திரசேகருடன், ரோகிணி, பிரகாஷ் ராஜ், விஜய் ஆண்டனி, அம்பிகா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.