ஆண்டுதோறும் நடிகர் விவேக்கை (Actor Vivek)  நினைவூட்டும் வகையில் என்னால் இயன்ற மரக்கன்றுகளை நடுவேன் என்று நடிகர் ஆர்யா (Arya) தெரிவித்துள்ளார். 

ஆண்டுதோறும் நடிகர் விவேக்கை நினைவூட்டும் வகையில் என்னால் இயன்ற மரக்கன்றுகளை நடுவேன் என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னாள் குடியரசு தலைவர் எபிஜே அப்துல் கலாம் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அகில இந்திய ஆர்யா ரசிகர் மன்றம் சார்பாக... சென்னை செம்மொழி பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்..

மேலும் செய்திகள்: திருடங்கள் இல்லாத ஜாதி இருக்கா? வக்கீலாக மாஸ் காட்டும் சூர்யாவின் 'ஜெய் பீம்' டீசர் வெளியானது..!

நிகழ்ச்சியாகுப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ஆர்யா, "நடிகர் விவேக் அவர்கள் எபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளன்று என்னை மரக்கன்று நடும் பொழுது கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்திருந்தார். ஆனால் தற்பொழுது அவர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. எனவே நடிகர் விவேகிற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று அப்துல் கலாம் பிறந்த நாளன்று அவரை நினைவூட்டும் வகையில் இன்று மரக்கன்றுகளை நட்டு வைத்தேன். இதே போல் ஆண்டுதோறும் என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட உள்ளதாக நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: கோடி கணக்கில் பணம் இருந்தும்... சிறையில் மகனுக்கு 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிய ஷாருகான் குடும்பம்!!

நடிகர் விவேக் கடைசியாக, ஆர்யா சுந்தர் சி இயக்கத்தில் நடித்து நேற்றைய தினம் வெளியான 'அரண்மனை 3 ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தற்போது வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.