கோடி கணக்கில் பணம் இருந்தும்... சிறையில் மகனுக்கு 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிய ஷாருகான் குடும்பம்!!
அக்டோபர் 3 ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் (Shah rukh khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan), மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து பார்ட்டியில் (Drug Party) ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பல ஷாருகான் குடும்பத்தினர் 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் ஆர்தர் சாலை சிறையின், தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்த ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், கொரோனா பரிசோதனை சோதனை செய்த பின்னர் பொது சிறைக்கு மாற்ற பட்டதாகவும், மேலும் ஆர்யன் கானுடன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற நபர்களும் சிறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து ஆர்தர் சாலை சிறை கண்காணிப்பாளர் நிதின் வேச்சால், ஆர்யா கான் மற்றும் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து பொது அறைக்கு மாற்றப்பட்டனர் என்று உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஷாருக்கான் மற்றும் கௌரி கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது, ஏற்கனவே இரண்டு முறை இவரது ஜாமீன் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்றும் இவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 20 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
என்.சி.பி தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், கப்பலில் சோதனை நடத்திய போது ஆர்யன் கானிடம் இருந்து எந்த போதை பொருட்களும் கிடைக்கவில்லை என்றாலும், அவர் கடந்த சில வருடங்களாகவே போதை பொருளை உட்கொண்டு வருவதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தனர். எனவே ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது தன்னுடைய மகனை இன்னும் வெளியே கொண்டுவர முடியவில்லை என்கிற ஏக்கம் ஒருபுறம் ஷாருகான் மற்றும் கௌரி கானுக்கு இருந்தாலும், தன்னுடைய மகனின் செலவுக்காக ரூபாய் 4500 மணி ஆர்டர் செய்துள்ளனர்.
இந்த பணம், சிறையில் இருக்கும் கேன்டீனில் விற்கும் பொருட்களை அவர் வாங்கி உண்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.
கோடி கணக்கில் பணம் இருந்தாலும், சிறை கைதியாக இருக்கும் தன்னுடைய மகனுக்கு அதிகப்பட்சமாக ரூ.4,500 மட்டுமே மணியார்டர் அனுப்ப முடியும் என்பதால், அவர்கள் அந்த தொகையை அனுப்பியுள்ளதாக சிறை கண்காணிப்பாளர் நிதின் வேச்சல் தெரிவித்துள்ளார்.
சிறை உணவுகள் எதையும் ஆர்யன் கான் உண்ணாமல் தவிர்த்து வருகிறார். எனவே கௌரி கான் வீட்டில் சமைத்த உணவுகளை தன்னுடைய மகனுக்கு சிறைக்கு எடுத்து சென்ற போதும், என்சிபி அதிகாரிகள் அதனை ஆர்யன் கானுக்கு கொடுக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.