எனக்கு பிடித்த ஹீரோ அஜித் தான்..!  இப்படி ஒரு காரணத்தை கூறிய ஸ்ரீ ரெட்டி ..!

சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி தற்போது சென்னைக்கு வந்து, சில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும் என்றால் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தன்னை பயன்படுத்திவிட்டு, ஏமாற்றி விட்டதாக தொடந்து பல புகார்களை முன் வைத்து உள்ளார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள், நடன இயக்குனர்கள்,மேக் அப் மேன்,கேமரா மேன் என  அனைவரையுமே காம்ப்ரமைஸ் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன் என அவர் தெரிவித்து இருந்தார்.

மேலும் இயக்குனர் முருகதாஸ் தமிழகத்தில் பெரிய இயக்குனர் என்பது கூட எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. எனக்கு தெரிந்த ஒன்று, இவர்கள் படத்தில் நடிக்க நல்ல ரோல் கொடுப்பார்கள் என்பது தான்..அதற்காக நான் அனைத்தையும் இழந்தேன் என தெரிவித்து உள்ளார்.

மேலும், சினிமாவில் நடிக்க வரும் எந்த ஒரு பெண்ணிற்கும் எனக்கு நேர்ந்த மாதிரி இனி யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதே என்னுடைய நோக்கம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

அப்போது, உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டனர். அதற்கு பதில் அளித்த நடிகை ஸ்ரீ ரெட்டி,"தமிழில் எனக்கு பிடித்த நடிகர் அஜித்...ஏனென்றால்,அவருடைய ஒரு லுக், அவருடைய atitude, படத்திற்கு படம் தன்னுடைய கெட் அப் மாற்றிக்கொள்ளும் விதம் இவை அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவர் கூட நடிக்க எனக்கு ஆசை உண்டு என அவர் தெரிவித்து உள்ளார்.இதுவரை, நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டை வைத்து வந்த ஸ்ரீ ரெட்டி, நடிகர் அஜித்தை மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.