சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பல வருடங்களுக்கு பின் காவல் அதிகாரியாக நடித்துள்ள 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதல் முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிவரும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகரும் நடன இயக்குனரும், சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகருமான இயக்குநர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு, தான் எந்த அளவிற்கு தலைவர் மீது தீவிர ரசிகனாக இருந்தேன் என்பது குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், உலக நாயகன் கமல் சார் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தால், அதன் மீது சாணி நடித்துள்ளேன் என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவர் பேசுகையில், தலைவர் படம் ரிலீஸ் ஆகும்போது போஸ்டர் ஒட்ட கூட சண்டை போட்டிருக்கிறேன். அதேபோல் கமல் சாரின் போஸ்டர் ஒட்டினால் அதில் சாணியை அளித்துள்ளேன். அப்போதைக்கு தன்னுடைய மனநிலை அந்த அளவுதான் இருந்தது.

இப்போது தான் தெரிகிறது அவர்கள் இருவரும் எவ்வளவு க்ளோஸ் என்பது. இருவரும் அவர்களுடைய கையைப் பிடித்து நடக்கும் போது ஏதோ நடக்கப் போவதாக எனக்கு தோன்றுகிறது. தீவிர ரசிகனாக இருந்த தன்னை முதல் வரிசையில் உட்கார வைத்து அழகு பார்த்துள்ளார் சூப்பர் ஸ்டார் என அவர் கூறினார். இவரின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்களின் கைதட்டல் பலமாக ஒலித்தது. எனினும், சாணி அடித்தது பற்றி ராகவா லாரன்ஸ் பேசியது, கமலின் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் இவரின் பேச்சுக்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

பின் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ராகவா லாரன்ஸ். 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் தான் பேசிய பிறகு, கமல் சார் போஸ்டர் மீது சாணி நடித்தேன் என்பது மட்டும் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. நான் சிறுவயதில் இருந்தே தலைவரின் தீவிர ரசிகன்,  அதே சமயத்தில் கமல் சார் மீது, மிகுந்த மரியாதையும் வைத்திருந்தேன். சிறு வயதில் அது தெரியாமல் செய்த ஒரு விஷயம். 

நான் எப்போதும் தவறாக பேசியிருந்தால் அதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்பேன். ஆனால் இப்போது எதுவும் தவறாக பேசவில்லை. என் மனதில் அவர் மீது எவ்வளவு மரியாதை வைத்துள்ளேன் என்பது தனக்கு தெரியும். அதனை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என தன்னுடைய கருத்தை பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு 'தர்பார்' சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.