பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா, மீண்டும் டிவிட்டர் பக்கம் திரும்பியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஓவியா, தனது தனிப்பட்ட குணாதிசயங்களால் மக்களால் ஈர்க்கப்பட்டார். அவரது வெளிப்படையான செயல்பாடுகளால் ஏராளமான ரசிகர்களை உருவாக்கி கொண்டார்.

அவர்கள் “ஓவியா ஆர்மி” என்றா பெயரில் சமூக வலைத் தளங்களில் இயங்கி வருவதோடு அப்ளிகேஷன், பாட்டு-லாம் உருவாக்கி உள்ளனர்.

இதனிடையே ஆரவ் உடனான காதல் விவகாரத்தால், மனமுடைந்த ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். மருத்துவ சிகிச்சைக்கு பின், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அவருக்கு பட வாய்ப்புகள் தற்போது குவிந்து வருகிறதாம்.

இந்த நிலையில் தனது டிவிட்டரில் நீண்ட நாட்களுக்கு பின் பதிவு ஒன்றை போட்டுள்ளார் ஓவியா.

அதில், ‘உங்கள் ஒவ்வொருவரிடம் இருந்து பெறும் அன்பையும், அக்கறையையும் வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன், மிக்க நன்றி, உங்கள் அனைவரின் அன்பினாலும் எனக்கு மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த டிவிட்டர் பதிவையும் சமூக வலைத்தளங்களில் பர[ப்பி தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கின்றனர் ஓவியா ரசிகர்கள்.