எனது மாநிலத்தை எடப்பாடி பழனிச்சாமி பிரதிநிதித்துவப்படுத்துவதைக் கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன் என நடிகர் சித்தார்த்  கருத்து தெரிவித்துள்ளார் ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுக இப்படி இருந்திருக்குமா எனவும் அவர் தனது ஆதங்கத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு  இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதாவை பாஷக மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. 

உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்துள்ளார் .  மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது எதிர்க்கட்சிகளும் மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.  இந்த மசோதாவில்  பாகிஸ்தான் ,  வங்கதேசம் ,   ஆப்கனிஸ்தான் ,   ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு  இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதோர் 5  ஆண்டுகள் இந்தியாவில் வசீத்தால் போதும் இந்திய குடியுரிமை அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இம் மசோதா நிறைவேற்றப்பட்டால் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட எதிர் கட்யினர் ஆதங்கத்தை வெளிபடித்தி வருவதுடன்,  இஸ்லாமியர்களை மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும் ஆவர்களையும் இணைக்கும்  வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று முழங்கி வருகின்றர். 

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள  நடிகர் சித்தார்த் ,  தனது மாநிலத்தை எடப்பாடி பழனிச்சாமி பிரதிநிதித்துவப்படுத்துவதைக் கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன் ,  குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்துள்ளதன் மூலம்,  எடப்பாடி பழனிச்சாமியின் உண்மையான  நிறத்தையும் நேர்மையையும்,  அதிகார பணத்திற்காக என்ன விலை  வேண்டுமானாலும் கொடுப்பவர் என்பது தெரிகிறது .  தற்போது நடக்கும் அனைத்திற்கும் உங்களுடைய அரசுதான் பொறுப்பு அதுவரை தற்காலிக அதிகாரத்தை அனுபவியுங்கள் .  குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை  ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் கண்டித்து இருப்பார் .  ஆதரித்திருக்க மாட்டார் ஜெயலலிதா இறந்த நிலையில்  அதிமுகவின் கொள்கை எப்படி மாறியது.?  என  டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.