i do not know will he get films in future says famous model questions
ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ”எங்க வீட்டு மாப்பிள்ளை” எனும் ரியாலிட்டி ஷோ மூலமாக, பிரபலமானவர் அபர்ணதி. ”எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சியின் மூலம் இப்போது பிரபலமாகி இருக்கும் இவர், சமீபத்தில் நடைபெற்ற “டிராஃபிக் ராமசாமி” திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

பெரிய பெரிய அரசியல்வாதிகள் மீது கூட, மிக தைரியமாக சமூக நல வழக்கு தொடுத்த, சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு தான் இந்த திரைப்படம். இத்திரைப்படத்தில் தளபதி விஜய்-ன் அப்பா சந்திரசேகர், டிராஃபிக் ராமசாமியாக நடித்திருக்கிறார். அவருடன் விஜய் ஆண்டனி, பிரகாஷ் ராஜ், ரோகிணி, அம்பிகா, லிவிங்ஸ்டன் போன்ற பல திரைத்துறை பிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கான இசைவெளியீட்டு விழாவின் போது, சந்திரசேகரை புகழ்ந்து பேசிய அபர்ணதி, அப்பா நடித்திருப்பதை பார்க்கும் போது, இனி தளபதி விஜய்க்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். என விளையாட்டாக கூறி இருக்கிறார். சந்திரசேகர் அந்த அளவிற்கு இத்திரைபப்டத்தில் நன்றாக நடித்திருப்பதாகவும் அபர்ணதி தெரிவித்திருக்கிறார்.
