குத்தகைக்கு கொடுத்த ஹோட்டலை இடித்து தள்ளிய வெங்கடேஷ், ராணா டகுபதி மீது வழக்குப்பதிவு!

Case Registered against Venkatesh and Rana Daggubati : குத்தகைக்கு கொடுத்த ஹோட்டலை சட்டவிரோதமாக இடித்து தள்ளிய நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் மீது ஹைதராபாத் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Hyderabad police registered a case against actors Venkatesh and Rana Daggubati for illegally demolishing the hotel rsk

Case Registered against Venkatesh and Rana Daggubati : நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சங்கராந்திகி வாஸ்துனம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாக உள்ள நிலையில் வெங்கடேஷ் மற்றும் ராணா டகுபதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வெங்கடேஷ் டகுபதி மட்டுமின்றி அவரது மருமகன் ராணா டகுபதி, தயாரிப்பாளர் ராணாவின் தந்தை சுரேஷ், அவரது சகோதரர் அபிராம் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிலிம் நகரில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துக்களை நந்தகுமாருக்கு டகுபதி குடும்பத்தினர் குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து நந்தகுமாரோ குத்தகைக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நந்தா டெக்கான் கிச்சன் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தான் நந்தகுமாருக்கும், டகுபதி குடும்பத்தினருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குத்தைகைக்கு கொடுக்கப்பட்ட இடத்தை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால், நந்தகுமாரோ திருப்பி கொடுக்கவில்லை. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற வெங்கடேஷ் டகுபதி மற்றும் ராணா டகுபதி ஆகியோர் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் இருந்த ஹோட்டலை சட்டவிரோதமாக இடித்து தள்ளியுள்ளனர். இதையடுத்து நந்தகுமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக அபகரித்ததாகவும், சட்டவிரோதமாக இடித்து தள்ளியதாகவும் கூறியுள்ளார். இதனால் தனக்கு ரூ.20 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நந்தகுமார் கொடுத்த மனுவின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் வெங்கடேஷ் மற்றும் ராணா டகுபதி உள்பட இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால், நந்தகுமார் சட்ட சர்ச்சையில் சிக்குவது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏக்கள் வழக்கில் அவர் தொடர்புடையவர். நந்தகுமார் குத்தகைக்கு எடுத்த இடத்தில் கட்டப்பட்ட ஹோட்டலின் சில பகுதிகளையும், அருகிலுள்ள கட்டமைப்புகளையும் இடித்து இது அங்கீகரிக்கப்படாத இடங்கள் என்று கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் குறிப்பிட்டது. பல ஆண்டுகளாக இந்த சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் இப்போது உச்சகட்ட நிலையில் வெங்கடேஷ் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் கடை இடிப்பு சம்பவத்தில் ஈடுபடவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios